காவ்யா மாதவன் திருமணம் யாருடன்? – டார்ச்சர் செய்யும் பேஸ்புக் ரசிகர்கள்!!!

21st of August 2014
சென்னை:மலையாள முன்னணி நடிகையான காவ்யா மாதவன், தமிழில், காசி, என் மன வானில் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது கணவரைவிட்டு பிரிந்தபின் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
 
ஆனால் இவர் அடுத்து திருமணம் செய்துகொள்ளப்போவது யாரை என்று கேட்டு காவ்யா மாதவனுக்கு முகநூலில் டார்ச்சர் கொடுத்து வருகிறார்களாம்.
 
இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் யாருடைய போட்டவையாவது சேர்த்து வைத்து இவரைத்தான் காவ்யா மாதவன் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என தவறான தகவல்களை பரப்புகிறார்களாம். இதனை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளாராம் காவ்யா மாதவன்..

Comments