17th of August 2014
சென்னை:பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்த சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுக்க வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடிய ’அஞ்சான்’ வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளதாக இப்பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது நேற்று முன் தினம் வெளியான இப்படத்தின் தமிழக வசூல் மட்டும் 11 கோடி ரூபாயாம்! இதை வைத்து பார்க்கும்மோது மற்ற மாநில வசூல், வெளிநாட்டு வசூல் என சூர்யாவின் ‘அஞ்சான்’ ஒரு புதிய சாதனை படைக்கும் என்கின்றனர்.
சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி யுடிவியுடன் தயாரித்து இயக்கிய அஞ்சான் . படத்தை பற்றி மாறுபட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட 1500 தியேட்டர்களிலும் கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது அஞ்சான். வருகிற புதன் கிழமை வரை முன்பதிவுகள் நிறைந்திருக்கிறது. இதற்கிடையில் படத்தின் முதல் நாள் வசூல் கணக்கை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஞ்சான் வெளியிடப்பட்ட வெள்ளிக்கிழமை மட்டும் தமிழ் நாட்டில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 23 லட்சம் ரூபாயும், இங்கிலாந்தில் திரையிடப்பட்ட 15 தியேட்டர்களிலிருந்து 42 லட்சம் ரூபாயும் வசூலாகி உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எல்லா நாடுகள் மற்றும் தியேட்டர்களையும் சேர்த்து முதல் நாள் வசூல் 15 கோடி இருக்கும் என்றும், வார கடைசி நாட்களின் வசூல் (வெள்ளி, சனி, ஞாயிறு) 30 கோடியை தாண்டும் என்றும், ஒரு வாரத்தின் முடிவில் 50 கோடியை எட்டிவிடும் என்றும் கூறுகிறார்கள். எனவே அஞ்சான் முதல் வாரத்திலேயே லாபத்தை எட்டிவிடும். என்றாலும் படத்தை பற்றி எதிர்மறை விமர்சனங்கள் சூர்யா, லிங்குசாமியின் அடுத்த பட சம்பளத்தை வெகுவாக பாதிக்கும் என்கிறார்கள் திரைப்பட வியாபார பிரமுகர்கள்.
Comments
Post a Comment