சிகரம் தொடு’ விழாவுக்கு வந்தார் கமல்..! பயந்தார் லிங்குசாமி!!!

7th of August 2014
சென்னை:அரிமா நம்பி’யின் சூடு தணியும் முன்னரே விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிகரம் தொடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்று வெகுசிறப்பாக நடத்தி அடுத்த எதிர்பார்ப்புக்கு நம்மை தயாராக்கியுள்ளனர். யுடிவி தயாரித்துள்ள இந்தப்படத்தை ‘தூங்கா நகரம்’ கௌரவ் இயக்கியுள்ளார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உலகநாயகன் கமல்ஹாசனும் பின்னணி பாடகர் ஜேசுதாசும் இன்னும் பலரும் வருகை தந்திருந்தனர்.. கமல் பேசும்போது ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் விக்ரம்பிரபுவை இந்த மேடையில் வாழ்த்துவதற்காகவே நேராக இங்கே வந்ததாகவும் குறிப்பிட்டார்,
 

இசைதகட்டை வெளியிட்டு கமல் கிளம்பியபின் மேடையில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, “கமல் இங்கே வந்ததால் எங்கே ‘உத்தம வில்லன்’ ஷூட்டிங் இன்னும் ஒரு நாள் அதிகமாகி விடுமோ என்று பயந்தேன். ஆனால்  நல்ல வேளை.. சிக்கிரமே கமல் கிளம்பிவிட்டார்.. அப்பாடா.. ரெண்டு நாட்களிலேயே முடித்து விடுவோம்..” என்று கூறி ஆசுவாசப்பட்டார். பின்னே ‘உத்தம வில்லன்’ தயாரிப்பாளர் அவர்தானே.. ஒரு நாள் ஷூட்டிங் செலவல்லாவா அவருக்கு மிச்சமாகிறது.

Comments