ரகசிய திருமணம் செய்தேனா: பதில் அளித்தார் விஷால்!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

31st of August 2014
சென்னை:ரகசிய திருமணம் செய்தேனா என்றதற்கு பதில் அளித்தார் விஷால்.ஹரி இயக்கத்தில் ‘பூஜை படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவர் தனது 37வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பின்னர் அவர் கூறியதாவது:தாமிரபரணி படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடிக்கிறேன். தீபாவளி தினத்தில் இப்படம் திரைக்கு வரும். கையில் பணம் இல்லாமல்தான் விஷால் பிலிம் பேக்டரியை தொடங்கினேன். தற்போது கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டு நல்ல படங்களை தேர்வு செய்து எடுக்கிறேன்.

அதுபோல் வி மியூசிக் என்ற ஆடியோ நிறுவனமும் தொடங்கி இருக்கிறேன். திருட்டு விசிடியை தனி ஆளாக நின்று ஒழிக்க முடியாது. திரையுலகினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ரஜினி, விஜய் போன்றவர்களும் குரல் கொடுக்க வேண்டும். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் விரைவில் கட்ட வேண்டும். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கில்லை. அடுத்து சுந்தர்.சியின் ஆம்பள, சுசீந்திரன் இயக்கும் படம் மற்றும் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளேன். பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு திருமணம் கிடையாது. ஆனால் சிலர் எனக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டது. குழந்தை பள்ளிக்கு செல்கிறது என்று எழுதுகிறார்கள். அதெல்லாம் பொய்.இவ்வாறு விஷால் கூறினார்.

Comments