சூர்யாவுக்கு வில்லன் ஜெயராம்..?!!!

7th of August 2014சென்னை:அஞ்சான் படத்தில் பார்த்திபன், பிரம்மானந்தம், ஜெயராம் உட்பட நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதில் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என செய்தி கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் ஜெயராமை ‘சரோஜா’ படத்தின் மூலம் வில்லனாக்கிய பெருமை இயக்குனர் வெங்கட்பிரபுவையே சேரும்.
 
பிரம்மானந்தம் வில்லனாக நடிக்கவில்லை என்பது உறுதி. அதேபோல ‘சரோஜா’ படம் வெளியானபின் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் ஜெயராம். அப்படியானால் இதில் வில்லன் பார்த்திபனா? இல்லை ஜெயராமா?
.
பிரியாணி படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் மாஸ். இதில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இதன் முன்னோட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில்தான் சூர்யா, நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
 
இந்த நிலையில் படத்தில் சூர்யாவுடன் ஜெயராம் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதில் காமெடி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அடுத்த மாதம் நடக்கும் படப்பிடிப்பில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். தற்போது ஜெயராம் கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார்

Comments