25th of August 2014
சென்னை:பையா, சிறுத்தை, நான் மகான் அல்ல படங்கள் கார்த்திக்கிற்கு தொடர் ஹிட்டாக அமைந்ததால், அவரை முதல்தட்டு ஹீரோவாக கொண்டு வந்து விட வேண்டும் என்று பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், அதையடுத்து, அவர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து கார்த்தியின் மார்க்கெட்டை குப்புற விழச் செய்து விட்டது. அதனால் இந்த நிலையை தொடர விடக்கூடாது என்று கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாகயிருக்கும் மெட்ராஸ் படத்தை வெளியிடுவதில் தடுமாற்ற நிலை நீடித்து வருகிறது.
அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் இந்த மெட்ராஸ் படத்தை சரியான நேரத்தில் வெளியிட்டு வெற்றி பெறச்செய்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கூடவே சமீபத்தில்தான் அவரது அண்ணன் சூர்யா நடித்த அஞ்சான் படம் படுதோல்வியடைந்ததால், அந்த பட்டியலில் இந்த படமும் இணைந்து விடக்கூடாது என்று உஷாராகியிருக்கிறார்கள்.

அதனால், மெட்ராஸ் படத்தை ஜூலை 15-ந்தேதியே வெளியிட திட்டமிட்டவர்கள் பின்னர் ஆகஸ்ட் 29ந்தேதி என்று சொன்னார்கள். ஆனால் இப்போது பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் பிக்கப்பாகி ஓடிக்கொண்டிருப்பதால், இது மெட்ராஸ்க்கு உகந்த நேரமல்ல என்று ரிலீஸ் தேதியை அக்டோபர் மாதத்திற்கு மாற்றி விட்டார்களாம். இந்த தேதியாவது உறுதியானதா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
Comments
Post a Comment