16th of August 2014
சென்னை:நடிகர் லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சாரிடபிள் ட்ரஸ்ட் ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியும். நம் நேற்று இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் சிவகுமார் அந்த ட்ரஸ்ட்டிற்கு சென்று நம் தேசிய கொடியை ஏற்றி அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இந்த நிகழ்வை லாரன்ஸுடன் இணைந்து ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தி தந்துள்ளார். இன்று பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் வெளியாகிறது என்றாலும் கூட அந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய பார்த்திபன் மற்றும் சிவகுமார், லாரன்ஸ் மூவரையும் மனமுவந்து பாராட்டாலாமே.
Comments
Post a Comment