கத்தி பட விவகாரம் - நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!!!

13th of August 2014
சென்னை:ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் விஜய் நடிக்கும் படம் ‘கத்தி’. இப்படத்தை ஐங்கரன் இண்டேர்நேஷனல் நிறுவனத்தின் கருணாகரன், இலங்கை நிறுவனமான லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இந்த லைக்கா நிறுவனம் சிங்களத்தவர் நிறுவனம் என்று, பலர் இப்படத்திற் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், இதை மறுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், லைக்கா நிறுவனம் இலங்கை தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என்று விளக்கம் அளித்தார். அந்த நேரத்தில் ஆரிப்போன இந்த பிரச்சனை தற்போது, மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

லைக்கா நிறுவனம் சிங்களத்தருடைய நிறுவனம் தான் என்றும், அதற்கான ஆதாரங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் மக்கள் வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து, கத்தி படத்திற்கு தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், தமிழ் அமைப்புகள் சில, நடிகர் விஜயின் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இதனால், சென்னையை அடுத்துள்ள நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜயின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 50 போலீஸார் விஜய் வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments