22nd of August 2014
சென்னை:பொல்லாதவன்’ படத்தில் தனுஷின் பைக்கை திருடும் வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான சென்ராயன், அதை தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’, ‘ஆடுகளம்’, ‘மூடர் கூடம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர்.
வில்லன், காமெடி என்று சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சென்ராயன் ஜீவா நடித்த ’ரெளத்திரம்’ படத்தில் மெயின் வில்லனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சென்ராயனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
கயல்விழி என்ற பட்டதாரி பெண்ணை சென்ராயன் காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, தற்போது திருமண ஏற்பாடுகளை செய்ய தொடங்கியுள்ளனர்.
சென்ராயன் - கயல்விழி திருமணம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி, வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் நடைபெறுகிறது.
இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.

Comments
Post a Comment