தீபாவளி வெளியீடாக ஒரே நாளில் கத்தி, அனேகன் ரிலீஸ்?!!!

23rd of August 2014
சென்னை:மாற்றான்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் 'அனேகன்'. தனுஷ், அமைரா நடிக்கும் இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தீபாவளி வெளியீடாக இப்படம் வெளிவரலாம் என கூறப்படுகிறது, ஆனால் இது பற்றிய அதிகாரப் பூர்வத் தகவல்கள் எதுவும் வரவில்லை.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துவரும் 'கத்தி' படத்தின் படப்பிடிப்புகளும் ஏறக்குறைய முடிந்துவிட்டன. பட வெளியீட்டில் சில சிக்கல்கள் இருந்துவரும் நிலையிலும் இப்படமும் தீபாவளி வெளியீடு எனக் கூறுகிறது படக்குழு.
 
இதற்குமுன் 'தேவதையைக் கண்டேன்' - 'திருப்பாச்சி', 'அது ஒரு கனாக்காலாம்' - 'சிவகாசி', 'படிக்காதவன்' - 'வில்லு', 'பொல்லாதவன்' - 'அழகிய தமிழ்மகன்', 'காவலன்' - 'ஆடுகளம்' ஆகிய தனுஷ் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானது. தற்போது ஆறாவது முறையாக தனுஷ்- விஜய் படம் வெளியாக உள்ளது. 

'கத்தி' தவிர விஷால் நடிக்கும் 'பூஜை', விக்ரம் நடிக்கும் 'ஐ' போன்ற படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

Comments