8th of August 2014
சென்னை:திருமணத்திற்கு பின் நடிக்க போவதில்லை என முடிவு செய்திருந்த அமலாபால், தனது கணவர் விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிப்பை தொடர முடிவு செய்துள்ளார்.
விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலாபால், அவருடன் ஏற்பட்ட காதலால் கடந்த மாதம் இயக்குஜர் விஜய்யை திருமணம் செய்த கொண்டார்.
திருமணத்திற்கு முன் அமலாபால் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் அவரது திருமணத்திற்கு பிறகே ரிலீஸ் செய்யப்பட்டு, சூப்பர் ஹிட் ஆகி உள்ளது.
வேலையில்லாத பட்டதாரி படத்தின் வெற்றி, அமலாபாலுக்கு மீண்டும் நடிப்பாசையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அறிந்த விஜய்யும் தனது மனைவி மீண்டும் நடிக்க ஓகே கூறிவிட்டாராம்.
அதன் முதல் முயற்சியாக துபாயைச் சேர்ந்த நகைக்கடையின் விளம்பர தூதராக்கி, அந்த விளம்பர படத்தையும் விஜய்யே எடுக்கிறாராம்.
திருமணத்திற்கு பின் நடிக்க வந்திருக்கும் தான் நடிக்கும் விளம்பர படத்தையும் தனது கணவரே இயக்குவது தனக்கு இரட்டை சந்தோஷத்தை ஏற்படுத்தி இருப்பதாக அமலாபால் தெரிவித்துள்ளார்.
மேலும் வேலையில்லாத பட்டதாரி தனக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களை பெற்று தந்திருப்பதால், அது போன்ற வாய்ப்புக்கள் வந்தால் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
Comments
Post a Comment