8th of August 2014
சென்னை:இன்றைய மலையாள திரையுலகில் விஸ்வரூபம் எடுத்து முன்னணியில் இருக்கும் நட்சத்திரம் தான் பஹத் பாசில். நடிகர் விஜய்யைப்போலவே பஹத் பாசிலுக்கும் அவரது தந்தையான இயக்குனர் பாசில் பின்புலமாக இருந்தாலும், பாசில் முன்னுக்கு வந்தது முழுக்க முழுக்க அவரது திறமையினாலும் உழைப்பினாலும் மட்டுமே..
பாதிமுடி கொட்டிப்போன தலையைக்கூட ஹாலிவுட்டைப்போல ப்ளஸ்ஸாக மாற்றிக்கொண்டு இன்று முன்னணி நடிகராக மாறியிருக்கிறார் என்றால் அதற்கு அவரது தன்னம்பிக்கைதான் காரணம். படத்தில் பத்து நிமிடம் வந்துபோகும் கேரக்டரா, இல்லை படம் முழுவதும் வந்து அண்டர்ப்ளே செய்யும் கேரக்டரா, ஹீரோயிசம் காட்டாத ஹீரோவா, கதாநாயகியை துன்புறுத்தி அவரிடம் அடிவாங்கும் சாடிஸ்ட் கேரக்டரா.. எதற்குமே பொருந்திப்போவதுதான் பஹத் பாசிலின் தனிச்சிறப்பு..
தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வர ஆரம்பித்த பஞ்சவர்ண கிளி
தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வர ஆரம்பித்த பஞ்சவர்ண கிளி
நஸ்ரியாவை தனது இதயச்சிறையில் அடைத்து இன்னும் சில தினங்களில் திருமணமும் செய்ய இருக்கிறார் பஹத் பாசில்.. இன்று பிறந்தநாள் காணும் பஹத் பாசிலுக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment