லிங்கா ஷூட்டிங்கின்போது மோசமான ஓட்டலில் தங்க வைத்தனர் சோனாக்ஷி புகார்: ரஜினி அதிர்ச்சி!!!

23rd of August 2014
சென்னை:லிங்கா ஷூட்டிங்கின்போது தன்னை மோசமான ஓட்டலில் தங்க வைத்ததாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா புகார் கூறினார்.சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா, லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார்.‘அபூர்வ ராகங்கள் படம் மூலம் கடந்த 1975ம் ஆண்டு திரையுலகுக்கு வந்தவர் ரஜினிகாந்த். இவர் திரையுலகுக்கு வந்து 40 ஆண்டுகள் நெருங்குகிறது.

இதையடுத்து அவருக்கு ‘லிங்கா படப்பிடிப்பில் பங்கேற்ற சோனாக்ஷி சின்ஹா வாழ்த்து தெரிவித்தார். அத்துடன்? ‘40 வருடம் நிறைவு செய்யும் தலைவருக்கு வாழ்த்துக்களுடன் என்று எழுதப்பட்ட கேக் பரிசளித்தார். இதுபற்றி சோனாக்ஷி கூறும்போது, ‘‘பல்வேறு மொழிகளில் 170 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்திய திரையுலகில் பெரிய சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.

தமிழ்நாடு மட்டுமல்ல ஆசிய மற்றும் ஜப்பானிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார். இதற்கிடையில் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ஷூட்டிங்கில் இருந்த சோனாக்ஷி தனது கடுப்பையும் இணைய தளத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். ‘என் வாழ்நாளில் மோசமான ஒரு ஓட்டலில் தங்கி இருந்தேன் என்று ஷிமோகா பகுதி ஓட்டலில் தான் தங்க வைக்கப்பட்டது பற்றி புகாராக வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து ‘லிங்கா‘ பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்டேஷிடம் கேட்டபோது,

‘ஜோக் பால்ஸ் அருகே நல்ல ஓட்டல்கள் அதிகம் கிடையாது. இருப்பதிலேயே சிறந்த ஓட்டலை தேர்வு செய்து அதில்தான் பட குழுவினர் தங்க வைக்கப்பட்டனர். சோனாக்ஷி இணைய தளத்தில் ஓட்டல்பற்றி வெளியிட்ட கருத்து பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார். சோனாக்ஷியின் புகாரை பற்றி அறிந்து ரஜினி அதிர்ச்சி அடைந்தாராம். பலரும் இது பற்றி விசாரிக்க தொடங்கிய சிறிது நேரத்தில், இணைய தள பக்கத்திலிருந்து ஓட்டல் பற்றிய தனது கோபமான கருத்தை நீக்கிவிட்டார் சோனாக்ஷி.

Comments