உத்தம வில்லன்’ ஷூட்டிங் ஓவர்!!!

10th of August 2014
சென்னை:லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ அரவிந்த் இயக்கியுள்ள உத்தமவில்லன் படப்பிடிப்பு சரியாக மார்ச்-3ல் ஆரம்பித்ததாக ஞாபகம்.. ஒவ்வொருகட்ட படப்பிடிப்பிற்கும் சீரான இடைவெளி விட்டு இதோ இப்போது முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டனர். அதே சூட்டோடு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் ஆரம்பித்து விட்டனர்.
 
இந்தப்படத்தில் ‘உத்தமன்’ என்ற 8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல். இதில் மனோரஞ்சனைக் கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய குருவாக சினிமா இயக்குனராக கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.
 
8ம் நூற்றாண்டில் நடக்கும் நடக்கும் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர். முத்தரசன் என்ற 8ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நடிக்கிறார் நாசர்.
 
ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராம், இவரின் வளர்ப்பு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி மேனன், சொக்கு செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப்படத்திற்காக நான்காவது முறையாக கமலுடன் கூட்டணி சேருகிறார் ஜெயராம். கமலின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிவிட ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Comments