தங்கை சவுந்தர்யாவைபோல் மூத்த மகளுக்கு கால்ஷீட் தருவாரா ரஜினி?!!!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
28th of August 2014
சென்னை:தங்கை சவுந்தர்யாவைபோல் ரஜினியை இயக்க விரும்புகிறார் ஐஸ்வர்யா.ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா. இவர் ரஜினி நடித்த ‘கோச்சடையான் படத்தை அனிமேஷன் கேப்சர் முறையில் படமாக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்தது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தனது கணவர் தனுஷ் ஹீரோவாக நடித்த ‘3‘ படத்தை இயக்கினார். இதையடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘வை ராஜா வை‘ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் ரஜினிக்கு திரையிட்டு காட்டினார். அதைப்பார்த்து பாராட்டு தெரிவித்ததுடன் அடுத்து இயக்கவுள்ள படத்துக்கான கதை பற்றி கேட்டார். அப்போது தனது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினியிடம் ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்தார். கதை பிடித்திருந்தால் நடிப்பதாக ரஜினி கூறியதாக தெரிகிறது.

தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘லிங்கா படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக விநாயகர் சதுர்த்தியன்று படத்தின் முன்னோட்ட காட்சியை வெளியிடும் பணியில் மும்முரமாக இருக்கின்றனர். தற்போது கர்நாடகாவில் ஷிமோகா பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது. இத்துடன் படத்தின் வசன காட்சிகள் பகுதி நிறைவு பெறுகிறது.

Comments