18th of August 2014
சென்னை:மலையாள நடிகை ஹரிகரன், சில மலையாள படங்களில் நடித்தாலும் அவரை
அடையாளம் காட்டியது கன்னட லூசியா. தற்போது தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன்
இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதி
கிளாமராக நடிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
பாலக்காட்டு மலையாளி பொண்ணுதான் நான். அப்பாவோட வேலை காரணமாக பெங்களூரில்
செட்டிலாயிட்டோம். டான்ஸ்னா உயிர்.
முறைப்படி நடனம் கத்துக்கிட்டேன். நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணினேன். என்னோட நிகழ்ச்சிக்கு வந்த இயக்குனர்கள் சினிமாவில் நடிங்களேன்னு ஆசையை தூண்டி விட்டாங்க. கொஞ்சம் முயற்சி பண்ணினதுல மலையாளத்தில் சினிமா கம்பெனிங்ற படத்தில் நடிச்சேன். தெக்கொரு தேசத்து, கால் மீ அட் படங்கள்ல நடிச்சாலும் கன்னட லூசியாதான் ஸ்ருதி யாருன்னு காட்டுச்சு.
அதுல நடிச்சிருக்கிறவங்க எல்லோருமே இரட்டை வேடம். ஒரு பகுதி பிளாக் அண்ட் ஒயிட்ல வரும். படம் செம ஹிட் கன்னடம், மலையாளத்துல நானும் பிசி. தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படம் மூலமா என்ட்ரி ஆகுறேன். இது ஒரு டிராவல் கதை. மற்றபடி படம் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்க கேள்விப்பட்ட மாதிரி கிளாமரா நடிக்கணும்னா எனக்கு கொஞ்சம் பயந்தான். இதுவரை அப்படி ஒரு தேவையில்லாம இருந்தது. இனியும் கிளாமராக நடிக்கிற உத்தேசமும் இல்லை. வித்யாபாலன், மாதுரி தீட்சித், தமிழ்ல ரேவதி, ஸ்ரீவித்யா, சுஜாதா மாதிரி வரணும்னு ஆசை என்கிறார் ஸ்ருதி ஹரிகரன்.

Comments
Post a Comment