இமானை சிக்கலில் மாட்டிவிட்ட பிரியா ஆனந்த்!!!

28th of August 2014
சென்னை:யார் வம்ம்பு தும்புக்கும் போகாதவர் இசையமைப்பாளர் டி.இமான்.. தான் உண்டு தன வேலையுண்டு என்று இருப்பவர். அவரை இன்று தேவையில்லாத சிக்கலில் இழுத்துவிட்டு விட்டார் நடிகை பிரியா ஆனந்த்.. கஷ்டமான விஷயம் தான்..

 நேற்று காலை சத்யம் தியேட்டரில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேச மைக் பிடித்த கதாநாயகி பிரியா ஆனந்திடம், தொகுப்பாளர், “நீங்கள் உங்களுடைய ஆசை என்று ஒன்றை இயக்குனரிடம் சொன்னீர்களாமே” என கேட்க “அய்யய்யோ.. உங்களிடமும் சொல்லிவிட்டாரா” என சிணுங்கினார் பிரியா ஆனந்த்.


அவருடைய ஆசை என்ன தெரியுமா..? குண்டு ஆப்பிள் போல இருக்கும் இசையமைப்பாளர் இமானின் கன்னத்தை பிடித்து கிள்ளவேண்டும் என்பதுதானாம். எப்படிப்பட்ட ஆசை பார்த்தீர்களா..? அதை வெட்கத்துடன் மேடையில் தெரியப்படுத்தியவர் அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.
யாரும் எதிர்பாராத வகையில் இமான் அசந்த ஒரு தருணத்தில் “சார்.. ப்ளீஸ்.. ஒரே ஒரு தடவை” என்று சொன்னவர் அவர் அருகே வேகமாக சென்று அவரது கன்னத்தை பிடித்து ஆசைதீர கிள்ளியதோடு, செல்லமாக “என் அமுல் பேபி.. செல்லக்குட்டி” எனவும் கொஞ்சினார்.

மேடையில் உட்கார்ந்திருந்தவர்களும் பார்வையாளர்களும் அப்படியே ஷாக் ஆகிப்போனார்கள்.. பார்வையாளர்கள் வரிசையில் இமானின் மனைவியும் அமர்ந்திருந்தார். அதனால் இமான் பேச வந்தபோது “இன்னைக்கு வீட்டுல எனக்கு நல்லா அடி கிடைக்கும்” என்று சொல்லி பரிதாப முகம் காட்டினார்.

Comments