உயிருக்கு போராடும் இயக்குநரை காப்பாற்ற அஞ்சலிக்கு வேண்டுகோள்!!!

26th of August 2014
சென்னை:திருமணம் நிகழ்ச்சி ஒன்றுக்காக சமீபத்தில் ஆந்திரா மாநிலம் சென்ற இயக்குநர் மு.களஞ்சியம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவருடன் சென்ற உதவி இயக்குநர்களில் ஒருவர் அந்த விபத்தில் பலியானார். படுகாயம் அடைந்த களஞ்சியம் ஒங்கோல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இதற்கிடையில் வருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறர். மேலும்,உடம்பு முழுவதும் பலத்த அடி பட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லையாம். யாரை பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே மனதில் நிலைக்கிறதம். மற்றபடி யார் என்ன என்பது பற்றிய உணர்வு ஏற்ப்படுத்த வில்லையாம். அப்போதைக்கப்போது கண் விழிக்கிறாராம். இதனால், அவர் நீண்ட காலம் சிகிச்சைப் பெற வேண்டி இருக்குமாம். இதனால் சிகிச்சைக்காக யாரிடம் போய் உதவி கேட்டாலும், ஏற்கனவே அவர் இயக்கி பாதியில் நிற்கும் ‘ஊர் சுற்றிப் புராணம்’ படத்திற்காக கொடுத்த பணம் என்ன ஆச்சு? என்று கேட்டு, சிகிச்சைக்கு உதவ மறுக்கிறார்களாம்.

அத்துடன், களஞ்சியத்தின் உடல் நிலையை காரணம் காட்டி, சிலர் கொடுத்த கடனைக் கேட்டு நச்சரிக்கிறார்களாம். எனவே, இந்த நெரிக்கடியான சூழ்நிலையை மனதில் வைத்து அஞ்சலி, ஊர் சுற்றிப் புராணம் படத்தில் நடிக்க வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால் களஞ்சியத்தில் உயிர் காக்க உதவியாக இருக்கும், என்று அவருடைய நட்பு வட்டாரங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அஞ்சலியிடம் இருந்து எப்படியாவது, பணத்தை வாங்கிக்கொடுக்க, திரைப்பட சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு உயிர் இழப்புக்கு காரணமாக வேண்டும், என்றும் களஞ்சியத்தில் நண்பர்கள் சிலர் ஆதங்கமாக பேசி வருகிறார்கள்.

Comments