27th of August 2014
சென்னை:கமலின் ‘திரிஷ்யம்’ படப்பிடிப்பு பாபநாசத்தில் துவங்கியுள்ளது. மோகன்லால், மீனா மலையாளத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இங்கு இப்படத்துக்கு ‘
‘பாபநாசம்’ படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். கவுதமி நாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீது ஜோசப், ‘பாபநாசம்’ படத்தையும் டைரக்டு செய்கிறார்.
இந்த படத்துக்கு எதிராக எழுத்தாளர் சதீஷ்பால் கொச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ‘திரிஷ்யம்’ கதை தன்னுடையது என்றும், எனவே படத்தை தனது அனுமதி இல்லாமல் தமிழில் ரீமேக் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டுமெனில் ரூ.10 லட்சத்தை பிணை தொகையாக கோர்ட்டில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதை படக்குழுவினர் ஏற்றுக் கொண்டு ‘பாபநாசம்’ படப்பிடிப்பை துவக்கியுள்ளனர்.
‘பாபநாசம்’ ஊரில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. கமல், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் இதற்காக அங்கு சென்றுள்ளனர். பாபநாசம் என்ற போர்டு வைத்த பஸ்சில் கமலும், கவுதமியும் பயணம் செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. கமல் வேட்டியும், கட்டம் போட்ட சட்டையும் அணிந்து இருந்தார்.
பாபநாசம் பகுதியில் வசிக்கும் கமல் வீட்டுக்குள், பெண் போலீஸ் அதிகாரி மகன் அத்துமீறி நுழைந்து அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார். அவனை மனைவியும், மகளும் கொன்று தோட்டத்தில் புதைக்கின்றனர். போலீஸ் பிடியில் சிக்காமல் மனைவி, மகளை கமல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை... பாபநாசம்’ என பெயரிட்டப்பட்டுள்ளது.

Comments
Post a Comment