15th of August 2014
சென்னை:ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ள ‘லிங்கா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஷிமோகாவில் 21 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ரஜினி சமீபத்தில் மங்களூர் விமான நிலையம் வந்து அங்கிருந்து காரில் ஷிமோகாவுக்கு பயணமானார். அதற்கு முன் விமான நிலையில் குழுமியிருந்த பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரஜினி பதிலளிக்கையில்,

லிங்கா’ படத்தை தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், ஷிமோகாவில் தொடர்ந்து 21 நாட்கள் ‘லிங்கா’வின் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் கூறினார். அத்துடன் இன்னொரு கேள்விக்கு ரஜினி பதில் அளிக்கையில்., ‘ஆண்டவன் கிருபையால் இப்போது என்னுடைய ஹெல்த் நன்றாக இருக்கிறது’’ என்றும் கூறிய ரஜினி, ‘22 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் மெங்களூர் வந்திருக்கிறேன்’ என்று கூறினார். அப்போது ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன்’ வெங்கடேஷும் உடன் இருந்தார்.
ஆக, ரஜினியே சொல்லிவிட்டதால் ‘லிங்கா’ அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகிவிட்டது.

Comments
Post a Comment