அரண்மனை பட விவகாரத்தில் ராய்லட்சுமியை வெறுப்பேத்திய ஹன்சிகா!!!

25th of August 2014
சென்னை:காஞ்சனா படத்திற்கு முன்பு பல படங்களில் பல ஹீரோயினிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. அந்த படங்களில் மற்ற ஹீரோயினிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, ராய் லட்சுமியை டம்மி பண்ணிய சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் அதற்கு எதிராக போர்க்கொடி பிக்காத அவர் இப்போது, அரண்மனை பட விவகாரத்தில் மட்டும் எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகிறார்.

இதற்கு காரணம், ஹன்சிகா தானாம். அந்த படத்தில் ஹன்சிகாதான் முக்கிய ஹீரோயினி என்றபோதும், ராய்லட்சுமிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கதையில் கூடுதல் பங்களிப்பு இருந்ததாம். அதனால், என்னதான் ஹன்சிகா, ஆண்ட்ரியா என மேலும இரண்டு ஹீரேயினிகள் இருந்தபோதும் தனது ரோலும் பேசப்படும் என்று நினைத்திருந்தாராம்.
 
அதோடு, லட்சுமிராயில் இருந்து ராய் லட்சுமியாக பெயரை மாற்றிய நேரம் என்பதால், இந்த நேரத்தில் உஷாராக இருக்க வேண்டும். டம்மியான வேடங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் உஷாராக இருக்கும் ராய்லட்சுமியை ஒருநாள் எதேச்சையாக சந்தித்த ஹன்சிகா, பேச்சுவாக்கில், நான் அரண்மனை படம் பார்த்தேன். என்னைச்சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறது. நீங்களெல்லாம் சைடு ரோலில் நடித்தது போல்தான் அவ்வப்போது வந்து விட்டு செல்கிறீர்கள் என்று பேச்சுவாக்கில் சொன்னாராம்.
 
விளைவு, அது ராய்லட்சுமிக்கு பெரிய அதிர்ச்சியானதோடு, மானப்பிரச்சினையும் ஆகி விட்டதாம். அதனால், என்னை புக் பண்ணும் எல்லாருமே இப்படித்தான், பெரிய ரோல் என்று சொல்லி பின்னர் புட்டேஜ் ப்ராபளம் என எனது காட்சிகளை பெரும்பாலும் கத்தரித்து விடுகிறார்கள். இப்படி எல்லாருமே நம்ப வைத்து கழுத்தை அறுத்து விடுவதால், யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டு திரிகிறார்.

Comments