8th of August 2014
சென்னை:மலையாள சினிமா பக்கம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தப் படம்
‘த்ரிஷ்யம்’. மோகன்லால், மீனா நடிப்பில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு
மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து
தெலுங்கில் மோகன்லால் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மீனா நடித்த வேடத்தில்
அவரே நடித்து சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல
கன்னடத்திலும் இப்படம் வெற்றி பெற்றது.
இதையடுத்து தமிழ் ரீமேக் கமல்ஹாசன் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. மீனா வேடத்தில் தமிழிலும் அவரே நடிப்பார் என்று கூறப்பட்டு பிறகு அதில் மாற்றம் ஏற்பட்டு சிம்ரன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்த வேடத்தில் கெளதமி நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கான தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மலையாளத்தில் த்ரிஷியம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார். இப்படத்திற்கு தமிழில் என்ன தலைப்பு வைப்பார்கள் என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், ‘பாபநாசம்’ என்ற தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கதை முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு நிகழ்வது போல மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தில் கமல்ஹாஸன் நெல்லைத் தமிழில் பேசி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Comments
Post a Comment