23rd of August 2014
சென்னை:ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை யார் பிடிப்பது என்கிற போட்டி
விஜய்-அஜீத்துக்கிடையே பலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது ஒரு பக்கம்
நடந்து கொண்டிருக்க இப்போது ரஜினியுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்து
நிற்கிறார் அஜீத்.
அதாவது, மங்காத்தா படத்திற்கு முன்பு வரை அஜீத்தின் மார்க்கெட் தள்ளாடிக்கொண்டுதான் கிடந்தது. ஆனால் மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களின் தொடர் வெற்றி அவரை அடுத்தடுத்து உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது. அதிலும் ஏ.எம் ரத்னத்துக்கு எந்த முன்னணி ஹீரோக்களும் கால்சீட் தராதபோது அஜீத் முன்வந்து ஆரம்பம் படத்தில் நடித்ததால், இப்போது தனது சூர்யா முவீசுக்காக அஜீத் நடிக்கும் படத்திற்கு 40 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து வேறொரு கம்பெனிக்கு ஒரு படம் பண்ணும் அஜீத், அதையடுத்து மறுபடியும் ஏ.எம்.ரத்னத்துககு ஒரு படம் பண்ணிக்கொடுக்கிறாராம். ஆனால் அந்த படத்திற்கு இன்னும் 10 கோடி உயர்த்தி 50 கோடியாக கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் அவர். ஆனால் அவர் சொன்னது போல் நடந்து கொண்டால், ரஜினி வாங்கும் சம்பளத்தை விட அஜீத்தின் சம்பளம் அதிகமாகிவிடும் என்கிறார்கள். அப்படியென்றால் இதுவரை இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக கருதப்பட்டு வரும் ரஜினியையே அஜீத் முந்திச்சென்று விடுவார் என்கிறார்கள்.
Comments
Post a Comment