10th of August 2014
சென்னை:பிராணிகள் மீது பிரியம் கொண்ட நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் த்ரிஷா மிகவும் குறிப்பிடத்தக்கவர். வெளியில் அநாதையாக திரியும் நாய்களை கூட வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கும் பாசமுடையவர் த்ரிஷா,

அவரை போன்று நடிகை சமந்தாவும் பிராணிகள் மீது பிரியம் கொண்டவர் போலும்! சமீபத்தில் ரோட்டில் அழகான ஒரு நாய் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார் சமந்தா! ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அதனை பிடித்துவிட்டதாம் சமந்தாவுக்கு,
உடனே அதனை வீட்டுக்கு எடுத்து வந்து, அதற்கு NORI என்று பெயரும் சூட்டப்பட்டு, அதனை தனது குடும்பத்தில் ஒரு அங்கமாக்கி விட்டிருக்கிறார். சமந்தாவின் பாசத்துக்கு ஆளான அந்த நாய் அதிர்ஷ்டக்கார நாய் தான்,
எங்கள் வீட்டுக்கு இப்போது ஒரு புதிய விருந்தினர் வந்திருக்கிறார் அவர் பெயர் நூரி. அவர் வந்ததில் இருந்து சந்தோஷமாக இருக்கிறேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். நாய்களை வாங்காதீர்கள். தத்தெடுங்கள்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.
Comments
Post a Comment