30th of August 2014
சென்னை:அஜித்துக்கு பிடித்தது பைக் ரைடிங்.. அப்புறம் கார் ரேசிங்.. இப்போது புதிதாக பாக்ஸிங்கில் களம் இறங்கியிருக்கிறார் அஜித். இது கௌதம் மேனன் படத்துக்காகவா இல்லையா என்பதை விட பைக், கார் உலகத்தில் இருந்து புதிதாக ஒன்றுக்கு கொஞ்சம் காலத்திற்கு மாறிப்பார்ப்போமே என்கிற ஒரு சின்ன ஆசைதான்.
ஆனால் அஜித் எந்த ஒரு விஷயத்திற்குள் இறங்கினாலும் அதில் தன்னை 100 சதவீதம் சரியாக பொருத்திக் கொள்வார் என்பது தெரியும் தானே.. அதுமட்டுமல்ல கூடிய விரைவில் இன்னொரு குழந்தைக்கும் அப்பாவாக போகும் சந்தோஷமும் அவரிடம் சேர்ந்துகொண்டிருக்கிறதே..
ரசிகர்களுக்காக வருடத்திற்கு இரண்டு படங்கள் பண்ணும் வழக்கமான பார்முலாவுக்குள் இப்போது அஜித் வந்துவிட்டார். தற்போது கௌதம் மேனன் படத்தில் நடித்துவரும் அஜித், அதை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
Comments
Post a Comment