21st of August 2014
சென்னை:சிபிராஜ் தற்போது ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘படத்திற்கு இப்படி பெயர் வைத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில், பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடிக்கிறது.
படப்பிடிப்பின்போது இந்த நாய் சிபிராஜை கிட்டத்தட்ட 13 தடவை கடித்து விட்டதாம். செல்லமான கடி தான். நாய்கள் மேல் கொண்ட பிரியத்தால் மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் சிக்கிய நாய் ஒன்றை தத்து எடுத்த சிபிராஜுக்கு இந்த கடி கூட சுகமான அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.
இதைவிட சுவராஸ்யமான அனுபவம் என்னவென்றால் இயக்குனர் ‘ஆக்ஷன்’ என்று சொன்னதும் உடனே பாய்ந்து ஓட ஆரம்பிக்கும் இந்த நாய், அவ்வப்போது செட்டில் உலா பலரை துரத்த ஆரம்பித்து பயங்கர கலாட்டவெல்லாம் செய்திருக்கிறதாம்.
இந்தப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். தரண்குமார் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் இசைவெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Comments
Post a Comment