மும்பையிலிருந்து மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வருகிறார் அசின்!

Asin Wallpaper
30th of August 2014
சென்னை:மும்பையிலிருந்து மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வருகிறார் அசின் தமிழில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் கடந்த 2008ம் ஆண்டு ‘கஜினி ரீமேக் மூலம் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதை ஏற்காமல் இருந்தார். ஆனால், எதிர்பார்த்தளவுக்கு பாலிவுட் கைகொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார். கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, அலியாபட் போன்ற ஹீரோயின்களின் அதிரடி கவர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அசின் திணறினார்.
 
இதையடுத்து மீண்டும் தென்னிந்திய படங்களுக்கு திரும்ப முடிவு செய்திருக்கிறார். விரைவில் தமிழ் படமொன்றில் நடிப்பதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதுபற்றி தனது இணைய தளபக்கத்தில் அவர் கூறும்போது,‘விரைவில் தென்னிந்திய ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொல்வேன் என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது கோலிவுட்டில் நயன்தாரா, திரிஷா, லட்சுமிமேனன், சமந்தா, ஸ்ருதி ஹாசன் என கடும் போட்டி இருப்பதால் அதை அசின் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments