சசிகுமாருக்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்!!!

1st of August 2014
சென்னை:இயக்குனர் பாலா தாடி வளர்க்கச்சொன்னாலும் சொன்னார்.. மீண்டும் சுப்ரமணியபுரம் பரமன் மாதிரியே ஆகிவிட்டார் சசிகுமார். எல்லாம் ‘தாரை தப்பட்டை’ படத்துக்காகத்தான்.. கரகாட்ட கலைஞர்களாக நடிக்கிறார்கள் சசிகுமாரும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வரலட்சுமியும்.
 
பாலாவின் படங்களில் வில்லன்கள் அனைவரும் தனி முத்திரை பாதிக்கும் கதாபத்திரங்களாகவே இருப்பார்கள்.. ‘பிதாமகன்’ மகாதேவன் மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இருவரும் இன்று பாலா படங்களின் அடைமொழியோடு தானே வெற்றிகரமாக உலா வருகிறார்கள்…
 
அந்த வகையில் வில்லனுக்கும் ஹீரோவுக்கு சமமான அந்தஸ்து தருபவர்தானே பாலா. ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு ஸ்டுடியோ 9’ நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்துவரும் தயாரிப்பாளர் சுரேஷுக்கு கிடைத்திருக்கிறது. இவர் எப்படி மிரட்டப்போகிறார் என்பதையும் பார்த்துவிடுவோம்..

Comments