11th of August 2014சென்னை:சிங்கம் - 2 சூப்பர்ஹிட் வெற்றிப் படத்துக்கு சூர்யா நடிக்கும் படம்
என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது - அஞ்சான் திரைப்படம். ஆகஸ்ட்
15 - ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இந்தப் படத்தின் சென்னை ஏரியாவின்
விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி இருக்கிறார்.
ரஜினியை வைத்து, ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தின் சென்னை விநியோக உரிமையை அபிராமி ராமநாதன்தான் வாங்கினார். அப்போது சிவாஜி திரைப்படத்தை சென்னையில் மட்டும் 17 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார். இப்போது சிவாஜி படத்தின் சாதனையை முறியடிக்கும் விதமாக அஞ்சான் படத்தை சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் அபிராமி ராமநாதன்!
சில தினங்களுக்கு முன் அஞ்சான் படத்திற்கான முன் பதிவு துவங்கியது. முன் பதிவு துவங்கிய 2 மணி நேரத்திலேயே 5000 டிக்கெட்டுகளுக்கும் மேல் முன் பதிவாகி இன்னொரு சாதனையும் படைத்திருக்கிறது அஞ்சான். சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே அஞ்சான் வேறு பல சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறது. அதாவது பெல்ஜியம், உட்பட இதுவரை தமிழ்சினிமா வெளியாகாத நாடுகளில் எல்லாம் அஞ்சான் வெளியாகிறது.
Comments
Post a Comment