பி.கே என்ற இந்தி படத்தில் அமீர்கானின் நிர்வாண போஸ்டர் வழக்கு தள்ளுபடியானதை வரவேற்ற குஷ்பூ!!!

15th of August 2014
சென்னை:பி.கே என்ற இந்தி படத்தில் நடித்துள்ள அமீர்கான், அந்த படத்தின் பப்ளிசிட்டியை கருத்தில் கொண்டு நிர்வாண போஸ் கொடுத்திருந்தார். ஒரு முன்னணி நடிகரே இப்படி நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்ததால் இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதனால் அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 
ஆனால், நேற்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். அதோடு, சினிமா என்பது ஒரு கலை. பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது. அதனால் அதற்கு தடை விதித்தால் படத்தை தயாரித்திருப்பவர் பாதிக்கப்படுவார். இந்த படத்தை பார்க்க விருப்பம் இல்லையென்றால் அதை பொதுமக்களே நிராகரிக்கட்டும். மேலும், இதில் தேவையில்லாமல் மதத்தையும் புகுத்த வேண்டாம் என்றும் சொல்லி அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
 
இதை திரையுலகைச்சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில், நடிகை குஷ்புவும் அதை வரவேற்றுள்ளார். கலையை மதித்து சினிமாத்துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Comments