21st of August 2014
சென்னை:சிங்கம்-2 படத்திற்கு பிறகு கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கயிருந்த
சூர்யா, அவர் படப்பிடிப்புக்கு செல்வது வரை கதையே சொல்லாததால், அவர்
படத்தில் நடிக்க மறுத்தார். அதையடுத்து லிங்குசாமியிடம் கதை கேட்டார், அவரோ
மூன்று கதைகள் சொன்னார். அதில் எதுவும் சூர்யாவுக்கு பிடிக்கவில்லை.
அதையடுத்து நான்காவதாக சொன்ன அஞ்சான் கதை பிடித்து விட அதில் நடிக்க
சம்மதம் சொன்னார். ஆனால், இப்போது அந்த கதையும் ஒர்க்அவுட் ஆகாமல் சொதப்பி
விட்டது.
அதனால், படம் திரையிட்ட நாளில் இருந்தே நெகடீவ்வான விமர்சனங்களை கேட்டு கேட்டு தலைசுற்றிப்போனார் சூர்யா. அதனால் இந்த பிரச்னையை மறக்க வேண்டுமென்றால், அடுத்து மாஸ் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க வேணடும் என்று சொல்லி, அஞ்சானை அடியோடு மறந்து விட்டு, மாஸ் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சூர்யா.
மேலும், இந்த படத்தை அஜீத்துக்கு மங்காத்தாவை கொடுத்து போன்று எனக்கு ஒரு மெகா ஹிட் படமாக கொடுத்து விடுங்கள் என்று வெங்கட்பிரபுவை கேட்டுக்கொண்டுள்ள சூர்யா, இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதில் ஒரு கெட்டப்பில் நீளமான முடியுடனும், இன்னொரு கெட்டப்பில் பேரழகனில் கூன் விழுந்தவராக நடித்தது போன்று ஒரு வித்தியாசமான உடல்கட்டுடன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதை படம் வெளியாவது வரை சஸ்பென்சாக வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
Comments
Post a Comment