சைவம்’ படத்தை தொடர்ந்து விஜய் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!!!

13th of August 2014
சென்னை:சைவம்’ படத்தை தொடர்ந்து விஜய் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு ‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’ என டூயட் பாடிய நடிகை மேனகாவை ஞாபகம் இருக்கிறதா..? அவரது செல்ல மகள் தான் இந்த கீர்த்தி சுரேஷ்.

 
இவர் இப்போது மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அறிமுகமான காலகட்டத்திலேயே மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘கீதாஞ்சலி’ மற்றும் திலீப்புடன் ‘ரிங் மாஸ்டர்’ என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார் கீர்த்தி. அதிலும் ‘ரிங் மாஸ்டர்’படத்தில் கண் பார்வையற்ற பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

இப்போது இவரை தமிழுக்கு கொண்டுவரும் முயற்சியின் பலனாக ஏ.எல்.விஜய் டைரக்ஷனில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.. இன்னும் சில தினங்களில் இந்த தகவல் உறுதியாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதன் படப்படிப்பு செப்டம்பரில் ஆரம்பிக்க இருக்கிறதாம்.
 
இதில் திலீப் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்த் விஜய் இயக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக விருக்கிறார். கீர்த்தியின் அம்மா மேனகா ‘நெற்றிக்கண்’ உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments