18th of August 2014
சென்னை:எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள படம் தான் ‘திருடன் போலீஸ்’. அட்டகத்தி’ தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தை கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கியுள்ளார். அட்டகத்தி, ரம்மி புகழ் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப்படத்தில் மறைந்த கவிஞர் வாலியின் பாடல் ஒன்றை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு. அதாவது இந்தப்பாடல் ஏற்கனவே சரண் தயாரித்த ‘ஆரண்யகாண்டம்’ படத்திற்காக எழுதப்பட்டு, ஆனால் அந்தப்படத்தில் பயன்படுத்தப்படாமல் நின்றுவிட்டது.
தற்போது அந்தப்பாடலை இந்தப்படத்தில் பயன்படுத்திக்கொள்ள சரணிடம் அனுமதி கேட்டிருக்கிறார் இயக்குனர். அவரும் யுவனிடம் “இதற்கு நல்ல டியூன் வாங்கி வா.. தருகிறேன்’ என்று சொன்னாராம். அப்படி வாங்கிவந்து இந்தப்பாடலை தனது படத்தில் உபயோகப்படுத்தியுள்ளார் கார்த்திக்.
Comments
Post a Comment