7th of August 2014
சென்னை:ரஜினியின் புகழில், வளர்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து ஓர் அங்கம் என்று சொல்வதை யாரும் மறுத்துப்பேச முடியாது.. “என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழ் அல்லவா?”
சென்னை:ரஜினியின் புகழில், வளர்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து ஓர் அங்கம் என்று சொல்வதை யாரும் மறுத்துப்பேச முடியாது.. “என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழ் அல்லவா?”
என தனது பாடல் வரிகளால் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் ரஜினியை ஏற்றிவைத்ததில் வைரமுத்துவுக்கும் பெரும் பங்கு உண்டு..
அப்படிப்பட்ட வைரமுத்து உடல்நலம் இல்லாமல் இருப்பதாக கேள்விப்பட்டால் சும்மா இருப்பாரா சூப்பர்ஸ்டார்.. உடனே கிளம்பியவர் நேரே வைரமுத்துவின் வீட்டிற்கே சென்றுவிட்டார்.. எப்போதும் வெள்ளை உடுப்பிலேயே வைரமுத்துவை பார்த்துவந்த ரஜினிக்கு அவர் கட்டம்போட்ட அரைக்கை சட்டையில் இருநத்தை பார்த்து ஆச்சர்யம் வேறு.
அதன்பின் வைரமுத்துவின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு, பொதுவான சில விஷயங்களையும் பேசிவிட்டுத்தான் அங்கிருந்து திரும்பினார் ரஜினி.
Comments
Post a Comment