5th of August 2014
சென்னை:இந்தி சினிமாவுக்குப் போன தமன்னா தற்போது மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ்
சினிமாவில் ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கில் பாகுபாலி
படத்தில் நடித்து வரும் அவர், தமிழில் சூர்யா, ஆர்யா ஆகியோருக்கு ஜோடியாக
நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமன்னா, கூறுகையில், “முன்னணி நடிகைகள் குத்தாட்டம் ஆடுவது தவறல்ல, நான் தெலுங்கு படம் ஒன்றில் குத்தாட்டம் ஆடும் படத்தை தயாரிப்பவர்கள், ஆரம்பத்தில் எனது வளர்ச்சிக்கு உதவியவர்கள் அதனால் தான் அவர்களுடைய படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன். நட்புக்காக தான் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்தேன். எவ்வளவு பணம் தரவேண்டும் என்பது படம் எடுப்பவர்களுக்கு தெரியும்.
படங்கள் தோல்வி அடைவதும் வெற்றி பெறுவதும் என் கையில் இல்லை. தெலுங்கில் முதலில் நடித்த படம் தோற்றது. தொடர்ந்து வந்த மேலும் இரு படங்களும் தோல்வியை தழுவின. ‘ஹேப்பி டேஸ்’ படம் வெற்றிக்கு பிறகு தான் நான் காலூன்ற முடிந்தது. அதுபோல் இந்தியில் 2 படங்கள் தோற்றாலும் கூட 3–வது படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி.
தமிழில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். தெலுங்கில் பாகுபலி, ஆகடு படங்களில் நடிக்கிறேன்.
திருமணம் பற்றி இன்னும் திட்டமிடவில்லை. திருமணத்தை பற்றி சிந்திக்கவோ அல்லது காதலிக்கவோ எனக்கு நேரம் இல்லை. பிசியாக நடிக்கிறேன். தினமும் மூன்று மணி நேரம் தான் தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறது.” என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment