மணிரத்னம் படத்தில் அலியா பட் - மம்மூட்டியின் மகன் துல்கர்!!!

29th of August 2014
சென்னை:கடல் படத்தையடுத்து, மகேஷ் பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதி ஹாசன் ஆகியோரை இணைத்து, ஒரு மெகா படம் இயக்க திட்டமிட்டிருந்தார், மணிரத்னம். சம்பள விஷயத்தில் மகேஷ் பாபு உடன்படாததால், அந்த திட்டத்தை தள்ளி வைத்து விட்டார். அதற்கு பதிலாக, மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை, அடுத்த படத்தின் நாயகனாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம்,
 
இந்தி நடிகை அலியா பட்டை, அந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க வைக்கிறார். ஏற்கனவே, அனேகன் படத்திலேயே அலியா பட்டை தமிழுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தார் தனுஷ். கால்ஷீட் பிரச்னையால் அது, 'ஒர்க்அவுட்' ஆகவில்லை. இந்த படத்தில் எப்படியாவது கால்ஷீட் கொடுத்து, நடித்து விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் அலியா பட்டின் மனம் விரும்பும் டைரக்டர்களில், மணிரத்னமும் ஒருவராம்.

Comments