18th of August 2014
சென்னை:இன்றைக்கு ராசியான நடிகை என்றால் அது லட்சுமிமேனனும், ப்ரியா
ஆனந்தும்தான். இருவர் நடித்த படங்களும் தொடர் ஹிட் அடித்துக்
கொண்டிருக்கின்றன. எதிர் நீச்சலில் துணிச்சலான பெண், வணக்கம் சென்னையில
துறுதுறு பெண், அரிமா நம்பியில் தண்ணி அடிக்கிற பார்ட்டி என விதவிதமாக
கலக்கி வரும் ப்ரியா ஆனந்த் அடுத்து இரும்பு குதிரையில் பைக்கெல்லாம்
ஓட்டுகிறார். அதோடு அவருக்கு குயின் ரீமேக்கில் நடிக்கவும் ஆசை.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: குயின் என் மனசுக்கு பிடித்தமான படம். அந்தப் படத்தை பற்றி பேச ஆரம்பித்தால் நாள் கணக்கில் பேசிக் கொண்டிருப்பேன். கங்கனா ரணாவத்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருக்கேன். சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய படம். இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக கேள்விப்பட்டேன். யார் நடித்தாலும் 100 சதவிகிதம் அதற்கு உண்மையாக நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு வேளை எனக்கு கிடைத்தால் கண்டிப்பாக உண்மையாக நடிப்பேன் என்கிறார்.
குயின் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருக்கிறார். அவரும் ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார். நர்கீஸ் பக்ரி நடிக்கலாம் என்று அவரும் சமீபத்தில் சொன்னார். ஆனால் அவர் நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிக்க வேண்டும் என்று விரும்பி அதற்காக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment