அதர்வாவால் முடிந்தது எட்டுக்கு ஆறு தான்!!!

9th of August 2014
சென்னை:பரதேசி’ படத்திற்குப்பின் ஒரு வலுவான கதையுடன் களம் இறங்க வேண்டும் என கதை தேடிக்கொண்டிருந்த அதர்வாவை, தானாக தேடிவந்து தன் மேல் ஏற்றிக்கொண்டது ‘இரும்புக்குதிரை’ திரைப்படம். யுவராஜ் போஸ் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்..

கதாநாயகியாக பிரியா ஆனந்தும், முக்கிய வேடத்தில் லட்சுமி ராயும்.. ஸாரி.. ராய் லட்சுமியும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக ‘ஏழாம் அறிவு’ மிரட்டல் வில்லன் டாங்லீ நடித்திருக்கிறார்.. இந்தப்படத்தில் அதர்வா ஒரு பைக் ரேஸராக நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் கலந்துகொண்ட அதர்வா, தான் இந்தப்படத்திற்காக பைக் ஓட்டிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இத்தாலியில் தான் இதற்கான ஷூட்டிங் நடந்தது. நான் ஓட்டிய பைக் சூப்பர் பைக் வகையை சார்ந்தது.. இதில் மொத்தம் எட்டு கியர்கள் இருக்கின்றன. நான்காவது கியரிலேயே 150 கி.மீட்டரை டச் பண்ணி விடலாம். ஆனால்  என்னால் ஆறு கியருக்கு மேல் தாண்ட முடியவில்லை. காரணம் எட்டாவது கியரை தொடவேண்டுமேன்றால் அவ்வளவு வேகமாக ஓட்டியாக வேண்டும்” என்று கூறினார்.

Comments