இனி ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டேன் - நர்கீஸ் பக்ரி அறிவிப்பு!!!

3rd of August 2014
சென்னை:ரசாந்த் நடிப்பில், அவருடைய அப்பாவும் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் படம் ‘சாஹஸம்’. அருண்ராஜ் என்ற புதுமுகம் இயக்கும் இப்படத்தில் நாசர், துளசி, தேவதர்ஷினி, லீமா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அபிசரவணன், ஜான்விஜய், மலேசியா அபிதா ஹேமா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லன்களாக கோட்டா சீனிவாசராவ், ராவ்ரமேஷ், சோனுசூத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில், பிரசாந்துடன் இணைந்து நடனமான பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த பாடல் சென்னையில் உள்ள பின்னி தொழிற்சாலையில் கடந்து சில நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது. ராஜு சுந்தரம் நடன அமைப்பில் உருவாகும் இப்படால் காட்சியின் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. 50 ரஷ்ய அழகிகளுடன் 100 ஆண் நடன கலைஞர்கள் இணைந்து ஆடும் இந்த பிரம்மாண்ட பாடல் காட்சிப் பற்றி கூற, பிரசாந்த், தியாகராஜன், நர்கீஸ் பக்ரி ஆகியோர் நேற்று படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


அப்போது நர்கீஸிடம் நிருபர் ஒருவர், இந்தி படங்களிலும் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறீர்கள், தற்போது தமிழ்ப் படத்திலும் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறீர்களே, இனி இதுவே தொடருமா? என்று கேட்டதற்கு, “இனி நான் ஐட்டம் டான்ஸ் ஆடப்போவதில்லை. நாயகியாக தான் நடிப்பேன். தியாகராஜன் சார் என்னிடம் இப்படம் குறித்து சொல்லி, ஐட்டம் டான்ஸ் ஆட அழைத்த போது, தமிழ் சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவே இந்த ஐட்டம் டான்ஸில் ஆட சம்மதித்தேன். இனி இந்தி படமாக இருந்தாலும் சரி, தமிழ்ப் படமாக இருந்தாலும் சரி ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டேன்.” என்று கூறினார்.

தமன் இசையில், கார்க்கி வைரமுத்து எழுதிய ‘காரத்தில் காரத்தில் சில்லி இவ...’ எனும் பாடலுக்கு தான் பிரசாந்தும், நர்கீஸும் இணைந்து ஆடியுள்ளனர். இந்த பாடல் குறித்து கூறிய தியாகராஜன், “இது குத்து பாட்டு போல இருக்காது, ஒரு நல்ல பெப்பியான பாடலாக இருக்கும்.” என்றார்.

Comments