மீண்டும் சிம்புவுடன் எனக்கு காதல் வருவதற்கு சான்சே இல்லை: நயன்தாரா!!!

9th of August 2014
சென்னை:வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்த நயன்தாரா, அந்த ஒரே படத்தோடு உதடு கடித்து முத்தம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறினார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அவர்களது காதல் முறிந்து போனது. அதையடுத்து, சில காலம் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, அடுத்தபடியாக பிரபுதேவாவை காதலித்தார்.
 
அந்த காதல் கல்யாணம் வரை சென்று கொண்டிருந்தது. அதற்காகவே நடிப்புக்கு முழுக்குப்போட்ட நயன்தாரா, கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கும் மாறினார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது இரண்டாவது காதலும் முறிந்தது. அதனால் மனசுடைந்து போன நயன்தாரா, நடிகர் ஆர்யாவின் அரவணைப்புடன் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
 
இந்தநிலையில், தற்போது மீண்டும் தனது முதல் காதலரான சிம்புவுடன் நயன்தாரா இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அவரை விட்டுவிலகியே நின்ற நயன்தாரா, நாளடைவில் நட்பு வளர்க்கத் தொடங்கினார். இருவரும் படப்பிடிப்பு தளத்தில் தனிமையில் அமர்ந்து பேசத்தொடங்கினர்.
 
அதைப்பார்த்து சிம்பு-நயன்தாராவுக்கிடையே மீண்டும் காதல் கொளுந்து விட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சிம்புதரப்பு மெளனம் காத்து வருகிறது. இதை, சில மாதங்களாக கண்டுகொள்ளாமல இருந்து வந்த நயன்தாராவோ இப்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
அவர் விடுத்துள்ள செய்தியில், சினிமாவில் நான் நடிக்க வந்திருக்கிறேன். அதனால் வேண்டப்பட்டவர், வேண்டாதவர் என்பதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தால் நடிக்கிறேன். அப்படித்தான் சிம்புவுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். உடன் நடிப்பதால் அவரிடம் பேசுகிறேன். மற்றபடி மீண்டும் சிம்புவுடன் எனக்கு காதல் வருவதற்கு சான்சே இல்லை. எனது நிஜமான மனநிலை என்ன என்பதை தெரியாமல் மீடியாக்கள்தான் இஷ்டத்துக்கு வதந்தி பரப்பி வருகின்றன என்கிறார் நயன்தாரா.

Comments