உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடின ஜெயம் ரவியும், த்ரிஷாவும் மீண்டும் கூட்டணி!!!

3rd of August 2014
சென்னை:உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடின ஜெயம் ரவியும், த்ரிஷாவும் தற்போது பூலோகம் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியின் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் பூலோகம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதுமட்டுமின்றி, சுராஜின் அடுத்த படத்திலும் 3வது முறையாக இந்த ஜோடி ஒன்று சேர உள்ளது. பெரிடப்படாத இந்த புதிய படத்தில் நடிப்பதற்கு முதலில் காஜலையே சுராஜ் அனுகியதாகவும், ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காதால் பின்னர், கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரினை ஒப்பந்தம் செய்ததாகவும் பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார்.
 
இந்த படத்திற்கான படப்பிடிப்புக்கள் கடந்த மாதம் சென்னையில் துவங்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலியும் நடிக்கிறார். கோலிவுட்டில் தான் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு அந்த படம் மிகப் பெரிய ஹிட் கொடுக்கும் என த்ரிஷா நம்புவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Comments