27th of August 2014
சென்னை:மலையாள நடிகர் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்தை தெரியும் தானே.. அவர் மலையாளத்தில் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் ‘கசின்ஸ்’. இதில் குஞ்சாக்கோ போபன் மற்றொரு ஹீரோவாக நடிக்க கதாநாயகிகளாக வேதிகாவும் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் நடிக்கிறார்கள்.

நான்கு தினங்களுக்கு முன்பு ‘கசின்ஸ்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட்டாக வந்து யூனிட்டில் உள்ளவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சூர்யா. காரணம் வெகு அருகிலேயே சூர்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுக்கொண்டிருந்ததுதான்.
சூர்யாவுக்கு கேரளா ரசிகர்கள் மட்டுமல்ல.. கேரளா நட்சத்திரங்களும் ரசிகர்கள்தான். அதனால் ஆளாளுக்கு ஆவலுடன் சூர்யாவுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துக்கொண்டனர். அவர்களுடன் சிறிதுநேரம் செலவிட்டு அவர்களை மகிழ்வித்து திரும்பியிருக்கிறார் சூர்யா..
Comments
Post a Comment