எந்திரனுக்கு அடுத்த இடத்தில் ‘அஞ்சான்’!!!

7th of August 2014
சென்னை:இன்னும் படம் ரிலீசாகவில்லை.. அதற்குள் பாக்ஸ் ஆபீஸ் கனவா என டக்கென்று வாயை விட்டுவிட வேண்டாம்.. இது வேறு விஷயம்.. வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதி உலகமெங்கும் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ வெளியாக இருக்கிறது.
 
கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளில் ‘அஞ்சான்’ ரிலீசாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்குமுன் சூப்பர்ஸ்டாரின் ‘எந்திரன்’ மட்டுமே இப்படி 3000  தியேட்டர்களில் வெளியானது.  அதற்கடுத்த படமாக ‘அஞ்சான்’ தான் அந்த இடத்தை பிடித்துள்ளது. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் இன்னும்  தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

Comments