20th of August 2014
சென்னை:இந்த செய்தியை நீங்கள் படிக்கும் வரை பிருத்விராஜின் தற்போதைய நிலைமை இதுதான். மலையாள ஹீரோக்களில் அதிகமான இளம் ரசிகைகளை கொண்ட பிருத்விராஜ், தன்னை துரத்தி துரத்தி காதலித்தவர்களை ஒதுக்கி தள்ளிவைத்துவிட்டு, டிவி தொகுப்பாளரான சுப்ரியாவை காதலித்து 2011ல் கரம் பிடித்தார்.

இதோ இப்போது மூன்று வருட சந்தோஷ தாம்பத்யம் கழிந்த நிலையில் அப்பாவாகப்போகும் மகிழ்ச்சியில் தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ள அவர், அங்குள்ள வராண்டாவில் மேலே சொன்னதுபோல இப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்.
அதனால் தான் அவர் நடித்த, காவியத்தலைவன் பட இசைவெளியீட்டு விழா நேரு நடந்தபோது கூட அவர் அதில் கலந்துகொள்ளவில்லை. ஹீரோ ஆனாலும் அவரும் முதன்முறையாக தந்தை ஆகப்போகும் ஒரு சராசரி மனிதன் தானே.. விரைவில் நல்ல செய்திக்காக அவருடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம்.
Comments
Post a Comment