மீண்டும் ஒரு ‘சீனப்புரட்சி’ ஏற்படுத்தப்போகும் ‘ஐ.’.!!!

15th of August 2014
சென்னை:இதுவரை ஒரு தமிழ்ப்படம் ஒரே நேரத்தில் எட்டு மொழிகளில் வெளியானதுதான் சாதனையாக இருந்தது.. ஆனால் ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, என இந்திய மொழிகள் மட்டுமன்றி சீன மொழியையும் சேர்த்து, மொத்தம் 15 மொழிகளில் வெளியாக இருக்கிறதாம்.
 
விரைவில் சீன மொழி டப்பிங் தொடங்கவிருக்கிறது. சீன மொழியில் டப்பிங் செய்யப்படும் முதல் தமிழ் படம் இது தான். உலக அளவில் சீனாவில் தான் அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் இருப்பதால் அங்கே மட்டும்  சுமார் 7000 திரையரங்குகளில் ‘ஐ’ படத்தை திரையிட இருக்கிறார்களாம். சீனாவிலேயே இவ்வளவு தியேட்டர்கள் என்றால் மொத்தம் எவ்வளவு என்கிறீர்களா..? ஜஸ்ட் 15000 தியேட்டர்கள் தானாம். அது தான் ஷங்கர்.
 
இந்தப்படத்திற்காக சுமார் 30 நாட்கள் அதிக சிரமப்பட்டு ஒரு சண்டைக் காட்சியை சீனாவில் படம்பிடித்து இருக்கிறார்களாம். இந்திய அளவில் இந்த சண்டைக்காட்சி பேசப்படும் என்கிறார்கள். அதுமட்டுமன்றி, சீனப் படங்களே இதுவரை படப்பிடிப்பு நடத்தாத இடங்களுக்கு எல்லாம் சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்களாம்.

Comments