படு கவர்ச்சியாக ஸ்ருதி ஹாசன் குத்தாட்டம் போட்டோ எடுக்க தடை!!!

22nd of August 2014
சென்னை:படு கவர்ச்சி உடையில் மீண்டும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார் ஸ்ருதி ஹாசன். அதை போட்டோ எடுத்து வெளியிடக் கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்.ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
 
சக போட்டியாளர்கள் சமந்தா, ஹன்சிகா போன்றவர்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தால் சம்மதிப்பதில்லை. ஆனால்,  கேட்ட தொகை கொடுத்தால் குத்தாட்டம் போட ஓ.கே. சொல்லிவிடுகிறார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் ‘ஆகடு என்ற தெலுங்கு படத்தில் குத்தாட்டம் போட ரூ.50 லட்சம் வாங்கியதாக தகவல் வெளியானது.தற்போது ‘தேவர் என்ற இந்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதற்கு அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு என்று இதுவரை சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இதற்கான பாடல் காட்சி மும்பையில் படமானது. அந்த காலத்து படங்களில் கிளப் நடன அழகிகள் தோன்றும் காஸ்ட்யூமில் படு கவர்ச்சியாக உடை அணிந்து ஸ்ருதி குத்தாட்டம் போட்டு இருக்கிறார். ஏற்கனவே டோலிவுட் படம் ஒன்றில் கவர்ச்சி ஆட்டம் ஆடியபோது அதை போட்டோகிராபர் ஒருவர் ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.
 
இதையடுத்து சர்ச்சையில் சிக்கினார். போலீசில் புகார் கொடுத்ததற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இம்முறை அதுபோல் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால் கவர்ச்சி உடை அணிந்தபோதும் ஆபாசமாக படம் எடுக்க கூடாது என்று முதலிலேயே தயாரிப்பாளரிடம் ஸ்ருதி கண்டிஷன் போட்டுவிட்டாராம்

Comments