சித்தார்த்தின் ஆலோசனைப்படி கிளாமர் விசயத்தில் கண்டிசன் போட்டு நடித்து வந்த சமந்தா லிமிட் தாண்டி விட்டாராம்!!!

22nd of August 2014
சென்னை:சித்தார்த்-சமந்தா இருவரும் ஒரேயொரு தெலுங்கு படத்தில்தான் இணைந்து நடித்தனர். அதற்குள் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விட்டது. இருவரும் ஜோடி போட்டு சினிமா விழாக்களில் ஆஜரானார்கள். அதனால் அவர்களது காதலை தெலுங்கு மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதி தள்ளின. இதன் காரணமாக சமந்தாவின் சினிமா கேரியர் பாதிக்குமோ என்று கருதிய சித்தார்த், காதல் பற்றி எந்த மீடியாக்கள் தன்னிடம் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதற்கு பதிலாக எரிந்து விழுந்தார்.
 
அதோடு எனது பர்சனல் விசயம் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள நான் தயாராகயில்லை என்று கூறிவந்தார். அதேபோல் சமந்தாவும் காதல் பற்றி எந்த பதிலும் சொல்லாமல் மூடி மறைத்து வந்தார். அப்போது, சித்தார்த்தின் தந்தைதான் சமந்தாவின் கால்சீட் பார்ப்பதாககூட செய்திகள் வெளியாகிக்கொண்டு வந்தன.
 
இந்த சூழ்நிலையில், சித்தார்த்தின் ஆலோசனைப்படி கிளாமர் விசயத்தில் கண்டிசன் போட்டு நடித்து வந்த சமந்தா, மகேஷ்பாபுவுடன் நடித்த ஒரு படத்தில் திடீரென்று அவரது கட்டுப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் லிமிட் தாண்டி விட்டாராம். அது சித்தார்த்தின் கவனத்துக்கு சென்றபோது கடும் கோபத்துக்கு ஆளானவர். சமந்தாவையும் அதிலிருந்து ஓரங்கட்டத் தொடங்கினாராம்.
 
அதோடு, அஞ்சான், கத்தி படங்களில் இன்னும் அதிரடியாக பிகினி கலாச்சாரத்துக்கு சமந்தா மாறியிருப்பதால், ஏற்கனவே விரிசல் விழுந்த அவர்களின் உறவு பாலம் இனிமேல் இணைவதற்கு சான்சே இல்லை என்கிறார்கள்.
 
இதன்காரணமாகத்தான், சமீபத்தில் திருமணம் பற்றி கூறும்போது, இன்னும் 2 வருடம் கழித்துதான் திருமணம் செய்வேன் என்ற சித்தார்த், பெண் யார் என்பதையும் அப்போதுதான் முடிவு செய்வேன் என்றார்

Comments