26th of August 2014
சென்னை:உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில்
ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்போது மீண்டும் அவர் உதயநிதியுடன் ஜோடி
சேருகிறார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது அடுத்து, உதயநிதி
நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். அதற்கு இன்னும் பெயர்
வைக்கவில்லை. இதுவும் காமெடி ஆக்ஷன் படம்தான். ஹீரோயின் ஹன்சிகா என்பது
முடிவாகி இருக்கிறது.
தற்போது உதயநிதி, ராஜேஷ்.எம் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கும் நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முந்தைய படமான இது கதிர்வேலன் காதல் படத்திலும் நயன்தாராதான் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. புதிய படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
Comments
Post a Comment