22nd of August 2014
சென்னை:அஜித்தை வைத்து ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என 4 படங்களையும், கமலை வைத்து ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, விக்ரமை வைத்து ‘ஜெமினி’ ஆகிய சூப்பர்ஹிட் படங்களையும் கொடுத்த வெற்றிப்பட இயக்குனர் சரண். இவரின் ‘ஜெமினி புரொடக்ஷன்’ மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது வினய் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நேற்று திருநெல்வேலியில் ‘ஆயிரத்தில் இருவர்’ படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது திடீரென படப்பிடிப்பிற்குள் நுழைந்த போலீஸார், படப்பிடிப்பை நிறுத்தும்படி கூறிவிட்டு, ‘‘50 லட்ச ரூபாய் செக் மோசடி வழக்கு உங்கள் மேல் தொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகாசி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் கோர்ட்டில் ஆஜர்படுத்த உங்களை கைது செய்து அழைத்துப்போக வந்திருக்கிறோம்!’’ என்று கூறி சரணை அழைத்துக்கொண்டு சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனால் நேற்று சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இப்பிரச்சனையில் நடந்தது என்ன என்பதை நாம் விசாரித்தபோது, இயக்குனர் சரண் தன் ‘ஜெமினி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்த ‘முனி’ படத்தின் போஸ்டர்களை பிரிண்ட் செய்து கொடுத்த நிறுவனம் ஒன்றிற்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகைக்காகவே இந்த புகார் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது. இகுறித்து இயக்குனர் சரணை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் கூறியதாவது,
‘‘என்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது உண்மைதான். ஆனால், என்மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்ட ஒன்று. நான் அவர்களுக்குத் தரவேண்டிய குறைந்தபட்ச பாக்கியை மிகப்பெரிய தொகையாக ஜோடித்து திட்டமிட்டு என்மீது புகார் கொடுத்துள்ளனர். அதோடு சினிமா மூலம் தொடர்ந்து பலனடைந்து கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் இந்தப் பிரச்சனையை சுமூக பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால் அதைவிடுத்து, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக சாதாரண சிவில் கேஸை, கிரிமினல் கேஸ்போல் உருவாக்கி போலீஸில் புகார் கொடுத்து படப்பிடிப்புத் தளத்திற்கு திடீரென வந்து என்னை கைது செய்ய வைத்திருக்கிறார்கள். என் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் கூறி தற்போது ஜாமீனில் வெளிவந்து விட்டேன். இப்பிரச்சனையை நான் சட்டப்பூர்வமாக அணுக இருக்கிறேன்!’’ என்றார்.

Comments
Post a Comment