20th of August 2014
சென்னை:அப்ஷாட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’.
கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் சூதாட்டத்தைப் பற்றி நகைச்சுவையாக
சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தில் கருணாகரன், பாபி சிம்ஹா, பாலாஜி,
விஜயலட்சுமி, நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன்
சேத்தன், அபிஷேக், விச்சு, கெளதம், சித்ரா லட்சுமணன், மிப்பு, டத்தோ
ராதாரவி, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை பா.விஜய், ஜி.கே.பி மற்றும் ரமேஷ் வைத்யா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜி.துவாரக் நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஜி.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரலமடைந்து, பிறகு வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வரும் மிர்ச்சி சிவா, இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குவதோடு, பி&சி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் பத்ரி. ஸ்கைலைன் கிரியேஷண்ஸ் என்ற நிறுவனம் சார்பில் டி.சுதிர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இப்படம் முழுவதுமாக முடிவடைந்து தணிக்கை சான்றிதழும் பெற்றுவிட்டது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வரும் செப்டம்பர் 19ஆம் தேதி படம் வெளியாகிறது.

Comments
Post a Comment